புதுச்சேரி பாஜக தலைவராக ராமலிங்கம் போட்டியின்றி தேர்வாகிறார்
Ramalingam elected unopposed as the Puducherry BJP president
புதுச்சேரி பாஜக தலைவர் பதவிக்கு இன்று மதியம் 12 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், தலைவர் பதவிக்கு ராமலிங்கம் ஒரே வேட்பாளராக இருந்ததால், அவர் தேர்வானது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து நாளை (திங்கட்கிழமை) மதியம் அவர் புதுவை பாஜக தலைவராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்கிறார். இதுவரை மாநில பாஜக தலைவராக இருந்தவர் சு.செல்வகணபதி எம்.பி. ஆவார். அவர் தற்போதும் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கட்சியை மேலே கொண்டு செல்லும் புதிய தலைமை தேவைப்பட்டதால், பாஜக தலைமை அமைப்பால் தலைமையில் மாற்றம் செய்யப்பட்டது. இதன் மூலம் கட்சி வளர்ச்சி மற்றும் தேர்தல் வெற்றிக்கான நடைமுறை இயக்கங்களை வலுப்படுத்தும் நோக்கத்துடன் புதிய தலைவரை அமைத்திருக்கிறது.
வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை நடக்க, பிற்பகல் 1 முதல் 3 மணி வரை வேட்பு மனு திரும்பப்பெறும் நேரம் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
Ramalingam elected unopposed as the Puducherry BJP president