குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு இன்று பிரியாவிடை.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் 14 வது குடியரசுத் தலைவராக உத்தர பிரதேச மாநிலத்தை சார்ந்த ராம்நாத் கோவிந்த் பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் வருகின்ற 24-ம் தேதியுடன் (நாளை) முடிவடைகிறது. இதையடுத்து, நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தின் சார்பில் இன்று பிரியாவிடை அளிக்கயுள்ளனர். ராம்நாத் கோவிந்திற்கு பிரியாவிடை நிகழ்வில் பிரதமர் மோடி, இரு அவைகளின் சபாநாயகர்கள், எம்.பி.க்கள், மத்திய அமைச்சர்கள், உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 

அதேபோல மூத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சி தலைவர்கள், பாஜக கட்சியின் மாநில தலைவர்கள் என பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் அக்கட்சியின் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இதற்காக டெல்லி சென்றுள்ள அவருடன், எஸ் வி வேலுமணி, தளவாய் சுந்தரம், பாராளுமன்ற உறுப்பினர்கள் தம்பிதுரை, சி.வி சண்முகம் ஆகிய உடன் சென்றுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ram Nath Kovind Farewell Party today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->