18 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய தேர்தல் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


டெல்லி மேல்சபையில் மொத்தமாக (ராஜ்ய சபா) மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் 12  ராஜ்ய சபா உறுப்பினர்கள் ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படுகிறார்கள். 

கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில சிறந்து விளங்குபவர்களை  ராஜ்ய சபா உறுப்பினர்களாக  ஜனாதிபதி நியமிப்பார்.

ஜனாதிபதியால் நியமனம் செய்யப்படும் இந்த 12 உறுப்பினர்களை தவிர்த்து மற்றவர்கள் ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள எம்.எல்.ஏ.க்களால் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒரு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும்.

தற்போது 18 மாநிலங்களவை எம்.பிகளின் பதவி காலம் முடிவடைகிறது. ஆகையால் 18 மாநிலங்களவை எம்.பிக்களை தேர்வு செய்ய ஜூன்.19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜூன்.19 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் அன்றே மாலை 5 மணிக்கு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajya sabha election in june 19th


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->