நடிகர் ரஜினியின் ஆதரவு யாருக்கு.?! ப்ரெஸ்  மீட் ரெடி.! வெளியான பரபரப்பு தகவல்.! - Seithipunal
Seithipunal


தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நாளை சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்நிச்சயம் கட்சி துவங்குவேன் என்று ரசிகர்களுக்கு உறுதி கொடுத்தார். அதன் பெயரில் ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் தீவிரமாக கட்சி பணிகளை துவங்கி ஈடுபட்டு வந்தனர். படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று ரத்த அழுத்த உயர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

தனது உடல்நிலை காரணமாக அரசியல் பயணத்திற்கு முற்றுப்புள்ளியை வைப்பதாகவும், தான் அரசியல் கட்சியை துவங்க வில்லை என்றும் திட்டவட்டமாக ரஜினிகாந்த் தெரிவித்து விட்டார். இதற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். 

இருப்பினும், நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு தற்போது தமிழக அரசியலில் எந்த கட்சிக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் பாஜகவுக்கு தான் ஆதரவளிப்பர் என்று பாஜக தொண்டர்களும், அதிமுகவுக்கு தான் ஆதரவளிப்பர் என்று அதிமுக தொண்டர்களும், இல்லை.. இல்லை.. திமுகவுக்கு தான் ஆதரவளிப்பர் என்று திமுக தொண்டர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டிருக்க, சமீபத்தில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் நேரடியாக ரஜினியை சந்தித்து சந்தித்திருக்கிறார்.

நடிகர்கள் ரஜினி -கமல் சந்திப்பு அரசியல் சம்பந்தமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், நலம் விசாரிக்கவே சென்றதாக நடிகர் கமலஹாசன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நாளை செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த் என்ன சொல்லப்போகிறார் என்ற எதிர்பார்ப்பில் ரஜினியின் ரசிகர்களும், தமிழக அரசியல் களமும் ஆர்வமுடன் காத்திருக்கின்றது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini press meet feb 26


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal