இதுவரை யாரும் பார்த்திடாத நடிகர் ரஜினிகாந்த்தின் அறிய புகைப்படம்.!
rajini old picture
நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளுக்கு, பாரத பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும் சமூக வலைத் தளம் மூலமாகவும் நடிகர் ரஜினிகாந்துக்கு பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சிறப்பு ஹேஷ்டேக் பயன்படுத்தி வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ், சமூக வலைத்தளத்தில் நடிகர் ரஜினியின் ஒரு அரிய புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் பகிர்ந்தனர்.

அந்த புகைபடத்தில், நடிகை ரஜினி அவரின் பழமையான கார் ஒன்றின் அருகில் குர்தா அணிந்து நின்று கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.