‘ராஜ்பவன்’ இனி இல்லை..! நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளுக்கு புதிய பெயர்...!
Raj Bhavan no more New name Governor Mansions across country
நாடு முழுவதிலும் உள்ள ஆளுநர் மாளிகைகளின் பெயர்கள் ஒரு முக்கிய மாற்றத்தை சந்திக்கின்றன. ராஜ்பவன் என அழைக்கப்பட்டு வந்த இந்த மாளிகைகள் இனிமேல் ‘மக்கள் பவன்’ என்ற புதிய பெயரில் அறியப்பட உள்ளன.

இந்த பெயர் மாற்றத்துக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமான ஒப்புதலை வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில், தமிழ்நாட்டு ஆளுநர் ஆர். என். ரவி இந்த பெயர் மாற்றத்துக்கான முன்மொழிவை பரிந்துரைத்தார்.
மக்கள் பங்குபற்றுதல் மற்றும் சமத்துவத்தை பிரதிபலிக்கும் வகையில், அந்த பரிந்துரையை மத்திய அரசு இப்போது ஏற்றுக்கொண்டுள்ளது.
இதன் மூலம், தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவின் அனைத்துப் மாநிலங்களிலுமுள்ள ஆளுநர் இல்லங்கள் இனி ராஜ்பவனாக அல்ல, ‘மக்கள் பவனாக’ அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளன.
புதிய பெயர் மூலம் ஆளுநர் இல்லத்தின் பொதுமக்கள் தொடர்பு மேலும் நெருக்கமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Raj Bhavan no more New name Governor Mansions across country