''பிரதமர் நரேந்திர மோடி இன்னும் ஓராண்டு காலம் கூட பதவியில் நீடிக்கமாட்டார்''; ராகுல் காந்தி..! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி இன்னும் ஓராண்டு காலம் கூட பதவியில் நீடிக்கமாட்டார் என்றும், மோடி அரசு நிறுவன ரீதியான கிளர்ச்சியை எதிர்கொண்டு வருவதாகவும், இது குறித்த உள் விவரங்கள் தமக்கு கிடைத்து வருவதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ஆதிவாசி காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி பேசும் போது கூறியதாவது;

இந்தியாவின் பாதுகாப்பு அமைப்பு என்பது சர்வதேசப் பொருளாதார அதிர்வுகளைத் தாங்கிக்கொள்ளும் ஒரு 'அதிர்வுத் தாங்கி'யாக செயல்பட்டது. அந்த அமைப்பை பாஜக அகற்றிவிட்டது என்றும், இதனால் நாடு ஒரு பொருளாதார சுனாமியை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும், விலைவாசி உயர்ந்து வருகிறது. வாழ்நாளில் நீங்கள் இதுவரை கண்டிராத மிகக் கடுமையான ஒரு பொருளாதார நெருக்கடியை இந்தியா சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், தேர்தல் ஆணையம் முழுமையாக மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், கடந்த மூன்று ஆண்டுகளாகவே அது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தலைமைத் தேர்தல் ஆணையர் எனக்கு தகவல்களை அனுப்பி வருகிறார் என்றும், உளவுத்துறை அமைப்பின் தலைவர், மூத்த நீதிபதிகள் என அனைவரும் பாஜக அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளதோடு, அவர்கள் எங்களுக்கு தகவல்களை வழங்கி வருகின்றனர். இந்தியாவில் தற்போது நிறுவன ரீதியான கிளர்ச்சி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளுக்குள்ளேயே சிதைந்து கொண்டிருக்கிறது என்றும், மக்கள் அழுத்தம் மிகக் கடுமையாக இருக்கப் போகிறது எனவும், நாம் இதே பாதையில் தொடர்ந்து பயணித்தால், அது நமக்கே ஆபத்தாக முடியும் என்பதை அதிகாரிகள் உணர்ந்திருப்பதாலேயே இத்தகைய நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.

அத்துடன், தேர்தல் நடைமுறையில் முறைகேடுகள் நடைபெறுவதை மக்கள் உணர்ந்து கோபமடைந்தால், தேர்தல் ஆணையம் அச்சமடையாது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? எனினும், மக்களின் அழுத்தத்தை அடக்குவதற்காக அரசு நெருக்கடி நிலையைப் போன்ற ஒன்றை அமல்படுத்த முயற்சி செய்யக்கூடும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி இன்னும் ஓராண்டு காலம் கூட பதவியில் நீடிக்கமாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Rahul Gandhi states that Prime Minister Narendra Modi will not remain in office for even another year


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->