நாளை மதியம் 12 மணிக்கு புதிய கட்சி குறித்த அறிவிப்பு..? அண்ணாமலையில் சூட்சமான ட்வீட்..! - Seithipunal
Seithipunal


ஐபிஎஸ் ஆக இருந்து அரசியலுக்கு நுழைந்தவர் அண்ணாமலை. தமிழக முன்னாள் பாஜக தலைவராகவும் இருந்துள்ளதோடு, தனது அரசியல் மேடை பேச்சுகள், பேட்டிகள் மூலம் தமிழக இளைஞர்களை பெரிதும் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில், இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் அண்ணாமலைக்கு அவருக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

சமீபமாக அவர்  பாஜகவில் இருந்து விலகி, புதிய கட்சியை ஆரம்பிக்க போவதாக செய்திகள் பரவலாகியுள்ள நிலையில், அவர் ஒரு முக்கிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

''நாளைய தினம் மதியம் 12 மணி அளவில், சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில்,''இன்றைய தினம் எனது பிறந்த நாளை முன்னிட்டு, அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்து, இந்த நாளை மேலும் சிறப்புமிக்கதாக்கிய அன்பு உறவுகள், நண்பர்கள் மற்றும் எனது நலன் விரும்பும் பெரியோர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அன்பும், பாசமும், நீங்கள் தொடர்ந்து வழங்கி வரும் ஆதரவும், தமிழக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்து தரப்பினரின் நலன், பாதுகாப்பு மற்றும் வளமான எதிர்காலத்திற்காக, இன்னும் அதிக அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டிய உத்வேகத்தையும் உற்சாகத்தையும் எனக்கு வழங்கியுள்ளன. 

உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன். அனைவருக்கும், மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவரது ஆதரவாளர்கள் அவரின் புத்தி கட்சியின் அறிவைப்பு குறித்த செய்தியைத்தான் நாளை அவர் வெளியிடுவார் என எதிர்பார்த்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalais cryptic tweet regarding the announcement of a new party


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->