விவசாயிகள் தான் இந்தியாவின் பலம்! ராகுல் காந்தி அட்வைஸ்!
Rahul Gandhi adviced farmers are strength of India
விவசாயிகளின் கருத்தை புரிந்துகொண்டு அவர்கள் சொல்வதைக் கேட்டால் நாட்டில் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என ராகுல் காந்தி மறைமுகமாக மோடிக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்தியாவின் பலமே விவசாயிகள் தான். அவர்கள் நேர்மையாகவும் விவேகமாகவும் செயல்பட கூடியவர்கள். கடினமாக உழைக்க தெரிந்த விவசாயிகளுக்கு அவர்களது உரிமைகளை அங்கீகரிக்கவும் தெரியும்.

அவர்களின் உரிமைக்காக வேளாண் சட்டங்களை எதிர்த்தும், குறைந்தபட்ச ஆதார விலை உரிமைக்காகவும் உறுதியாக நின்று போராடினார்கள். விவசாயிகள் சொல்வதைக் கேட்டு அவர்களின் கருத்தை புரிந்து கொண்டால் இந்தியாவின் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.
இந்தியாவை ஒருங்கிணைக்க விவசாயிகள் மிக முக்கிய பங்களிப்பை வழங்குகின்றனர். அவர்கள் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் பரவி உள்ளனர்.

சமீபத்தில் அருமையான சென்றிருந்தபோது நான் சஞ்சய் மாலிக் மற்றும் தஷ்பீர் குமார் என்ற இரு விவசாய சகோதரர்களை சந்தித்தேன். அவர்கள் இருவரும் சிறுவயதில் இருந்தே நல்ல நண்பர்களாக இருந்து வரும் நிலையில் பல ஆண்டுகளாக ஒற்றுமையாக விவசாயம் செய்து வருகின்றனர்.
அவர்களிடமிருந்து பல விஷயங்களை சுதந்திரமாக ஆலோசித்தேன். அந்த கிராமத்தில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் என் மீது அதிக அன்பு கொண்டு அவர்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்து வீட்டில் செய்த உணவை எங்களுக்கு வழங்கினார்கள்" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
English Summary
Rahul Gandhi adviced farmers are strength of India