"மனநோயாளியைப் போல" மாறிய.. விஜயபாஸ்கரை பங்கம் செய்த ரகுபதி.!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டையில்  சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதிசெய்தியாளர்கய் சந்தித்தபோது "  திருமயம் சட்டப்பேரவை உறுப்பினராக நான் 2016 முதல் 2021 வரை இருந்த காலத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது பற்றி ஏதாவது பரிந்துரை செய்தால் உடனடியாக அதற்கான அனுமதியைத் தடுத்தவர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால் இப்போது ஜல்லிக்கட்டுப் போட்டிகள் ஜனநாயக படி நடக்க வேண்டும் சொல்கிறார். எங்களிடம் எந்தபாரபட்சமும் இல்லை.


புதுக்கோட்டைக்கு அரசு பல் மருத்துவக் கல்லூரியை தான் கொண்டு வந்ததாகவும், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு திறந்துவிட்டு செயல்படாமல் வைத்திருப்பதாகவும் குற்றம் சுமத்தி இருக்கிறார். கொரோன காலத்தில் நிதியே ஒதுக்காமல் ஒப்பந்தப்புள்ளிகள் கோரிவிட்டார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன.

திறப்பு விழாவுக்குப் பிறகு தற்போது வகுப்புகள் நடந்து வருகிறது. மக்கள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே தவறான தகவல்களைச் சொல்லி மனநோயாளியைப் போல மாறிவிட்ட அவரை அவரது குடும்பத்தினர் நல்ல மருத்துவர்களிடம் அழைத்துச் செல்ல வேண்டும் நல்ல எண்ணத்துடன் கேட்டுக் கொள்கிறேன்" என முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பங்கமாக ககைத்துள்ளார் அமைச்சர் ரகுபதி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Raghupathi criticized VijayaBhaskar became like mental patient


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->