கொதித்தெழுந்த நடிகை ராதிகா .. "ஏன் டா படுபாவி" .. ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா?! - Seithipunal
Seithipunal


 திமுகவில் இருக்கும் அடிமட்ட நிர்வாகிகள் முதல் அமைச்சர்கள் வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தாலும் திமுகவில் அருவருக்கத்தக்க கருத்துக்கள் பொது மேடைகளில் பேசுவதையே வழக்கமாகக் கொண்ட சில பேச்சாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 

சென்னையைச் சேர்ந்த திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆபாசமாக பேசுவதில் கைதேர்ந்தவர். இவர் கடந்த ஆண்டு நடிகை குஷ்பு குறித்து ஆபாச முறையில் பேசியதற்காக கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். 

அதன் பிறகு திமுக தலைமைக்கு எழுதிய மன்னிப்பு கடிதத்தை எடுத்து அவர் மீண்டும் திமுகவில் இணைக்கப்பட்டார். இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீண்டும் தனது பானையில் நடிகையும் விருதுநகர் தொகுதி பாஜக வேட்பாளருமான ராதிகா சரத்குமாரையும் நடிகர் சரத்குமாரையும் ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டு விமர்சனம் செய்திருப்பது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

அதனை பாஜக நிர்வாகி எக்ஸ் பக்கத்தில் பதிவிட அதனை ரீட்விட் செய்த நடிகை ராதிகா சரத்குமார் "ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங்களே...அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்., shame on #dmk @mkstalin @Udhaystalin disgraceful"என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Radhika SarathKumar condemned DMK spokesperson


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->