உயர் நீதிமன்றத்தை நாடிய ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்.. திருப்பி அனுப்பிய நீதிபதி.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கி கடந்த ஜூன் மாதம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். 

இதனால் தனது நற்பெயர், அரசியல் பொது வாழ்விற்கு களங்கம் விளைவித்ததாக கூறி ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்-க்கு எதிராக எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் புகழேந்தி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு விசாரணைக்கு ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் இன்று நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 

இந்நிலையில், இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்டு ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்து விசாரிக்குமாறு இருவரும் நீதிமன்றத்தில் முறையிட்டனர். 

ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த மனு வழக்கமான பட்டியலுக்கு வரும்போது விசாரிக்கப்படும். விசாரணையின் போது நீதிமன்றத்தில் எதிர்மறையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டால், அதை எதிர்த்து அப்போது உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pugalenthi case against ope and eps


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->