சொந்தக்கட்சி சேர்மனை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய திமுக கவுன்சிலர்கள்..!
Pudukkottai Chairman Meeting DMK Counselor Opp to Chairman She Recently Joins DMK from AIADMK
புதுக்கோட்டை மாவட்ட குழுவில் திமுக கவுன்சிலர்கள் பெருவாரியாக இருந்தும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சாதுர்யம் காரணமாக அதிமுகவை சார்ந்த ஜெயலட்சுமி வாக்கெடுப்பில் வெற்றி பெற்று சேர்மன் ஆனார். துணை சேர்மன் பதவியையும் திமுக பறிகொடுத்து தவித்தது.
இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற்றதை தொடர்ந்து, அமைச்சர் ரகுபதியின் உதவியுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் சேர்மன் ஜெயலட்சுமி திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதனால் அம்மாவட்ட அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று மாவட்ட கவுன்சில் கூட்டம் நடப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், சேர்மன் ஜெயலட்சுமி கூட்டத்திற்கு வந்து தனது அறையில் இருந்தார். ஆனால், கூட்டத்திற்கு வருகை தந்திருந்த அதிமுக கவுன்சிலர்கள் சேர்மன் பதவி விலகி வேண்டும் என முழக்கமிட்டனர்.

திமுகவை சார்ந்த சில கவுன்சிலரும் கட்சிமாறி வந்த சேர்மன் பதவி விலக வேண்டும். அவர் பதவி விலகும் வரை கூட்டத்தில் பங்கேற்கமாட்டோம் என போர்க்கொடி தூக்கவே, கவுன்சிலர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்து திமுக கவுன்சிலர்கள் கூறுகையில், " திமுக கவுன்சிலர்கள் அதிகம் இருந்தும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் சூழ்ச்சியால் சேர்மன் பொறுப்பேற்ற ஜெயலட்சுமியை திமுகவினர் ஏற்றப்போவதில்லை.
அவர் தற்போது திமுகவில் இருந்தாலும் சேர்மன் பொறுப்பை எதிர்க்கிறோம். திமுகவுக்கு நாங்கள் துணையாக இருப்போம். அதில் மாற்று கருது இல்லை. தலைமை திமுகவை சார்ந்த ஒருவரை, கட்சிக்காக உழைத்த எங்களில் ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் " என்று தெரிவித்தனர். அதிமுக கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி துரோகம் செய்துவிட்டதால் அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Pudukkottai Chairman Meeting DMK Counselor Opp to Chairman She Recently Joins DMK from AIADMK