அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி வேதனை! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் அரசு அதிகாரிகளால் மன உளைச்சல் ஏற்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி வேதனையுடன் தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்களால் மக்களுக்கு எதுவும் செய்து கொடுக்க முடியவில்லை. அதிகாரம் இல்லாததால் தினமும் மன உளைச்சல் தான் ஏற்படுகிறது என்று, புதுச்சேரி மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டிய நடத்தப்படும் போராட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தாவது, "உச்சநீதிமன்றம் உத்தரவு தெளிவாக சொன்ன பிறகும், நமக்கு மரியாதையே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

உண்மையான விடுதலை புதுச்சேரிக்கு கிடைக்கவில்லை. மத்திய அரசு எனக்கு ஒத்துழைக்கவில்லை. அதிகாரிகளை கொண்டு தனது பணிகளை முடக்கி வருகிறது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் நிர்வாகம் செய்வதில் சிரமம் உள்ளது. இது ஆள்பவர்களுக்கு மட்டுமே தெரியும். எனக்கு அதிகாரம் வேண்டும் என்பதால் மாநில அந்தஸ்து கேட்பதாக சிலர் நகைப்பு செய்கின்றனர். 

புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடைய வேண்டும், எதிர்காலத்தில் அரசியலுக்கு வருபவர்களுக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதால் தான் நான் தொடர்ந்து மாநில அந்தஸ்து கேட்கிறேன்" என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puducherry chief minister rangasamy


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->