மணிப்பூரில் ஆலங்கட்டி மழை... கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


மணிப்பூர் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை, ஆலங்கட்டி மழை பெய்ததால் வீடுகள் மற்றும் வாகனங்கள் செய்தமடைந்துள்ளன. இம்பாலின் மேற்கில் உள்ள காஞ்சிபூர் மற்றும் தேரா போன்ற பகுதிகளில் பல வீடுகள் செய்தமடைந்தன. 

மேலும் பலத்த காற்று காரணமாக குடிசைகளும் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று மற்றும் நாளை இரண்டு நாட்கள் விடுமுறை அளித்து அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாநிலத்தில் நிலவும் மோசமான வானிலை காரணமாக 2024 மே 6ஆம் தேதி மற்றும் 7 ஆம் தேதி அன்று அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்படும். 

தற்போதைய வானிலை அபாயங்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மாநில அரசு உயிர்கள் மற்றும் உடமைகளை பாதுகாக்க மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுத்து வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Manipur hailstorm schools colleges Holiday 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->