தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும்.! வெளியானது அதிரடி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையான 14 & 15 ஆம் தேதி அரசு விடுமுறை வழங்கப்படும் நிலையில், சனிக்கிழமையும் சேர்த்து விடுமுறை அறிவிக்க கூறி ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு 16 ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

இதனால், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை தினத்தையடுத்து, சனி மற்றும் ஞாயிறு என 4 நாட்கள் விடுமுறை என்பதால், வெளியூர்களில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் சொந்த ஊர் சென்று திரும்ப எதுவாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வருகின்ற 14 மற்றும் 15 ஆகிய இரு நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால், வார இறுதி நாளான 16 .10 .2021 அன்று பொறியியல் கல்லூரிகள் மற்றும் அனைத்து பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் (பாலிடெக்னிக்) விடுமுறை அளிக்கப்படுகிறது" என்று உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, புதுச்சேரி கல்வித்துறை துணை இயக்குநர் சிவகாமி வெளியிட்ட உத்தரவில், "வரும் 15, 16ம் தேதிகள் புதுச்சேரி, காரைக்காலில் அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது" என்று சிவகாமி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PUDUCHCHERY AYUDHA POJA SCHOOL LEAVE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal