கரூரில் நிகழ்ந்த 39 பேர் மரணம் திமுக அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை - கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி!
PT krishnasamy Karur Stampede DMK MK Stalin TVK Vijay
கரூரில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்ட நெரிசலில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறித்து கடும் வருத்தம் தெரிவித்தார்.
குழந்தைகள், பெண்கள், முதியோர் உள்ளிட்ட பலர் உயிரிழந்த சம்பவம் மனதை உலுக்கும் துயரமென அவர் கூறி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
திரைத்துறையில் பிரபலமானவர் என்றும், புதிய கட்சி தொடங்கியவர் என்றும் அறிந்திருந்தும் காவல்துறை கூட்டம் பெருகும் அபாயத்தை புறக்கணித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
முதலில் அனுமதி மறுக்கப்பட்டபின், வெறும் 22 அடி அகலமும் 200 அடி நீளமும் கொண்ட குறுகிய வேலுச்சாமிபுரம் சாலையே நிகழ்ச்சிக்கு ஒதுக்கப்பட்டதை அவர் கேள்வி எழுப்பினார்.
கூட்ட நெரிசல் நிறைந்த மையப்பகுதிக்குள் விஜயின் வாகனத்தை செல்ல காவல்துறை நிர்பந்தித்ததே இந்த துயரத்துக்கு முக்கிய காரணமென கிருஷ்ணசாமி சுட்டிக்காட்டினார்.
அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்குவதில் அரசு பாகுபாடின்றி செயல்பட வேண்டும், காவல்துறை நடுநிலை காக்க வேண்டும் என அவர் வலியுறுத்தி, இந்த பெரும் உயிரிழப்புக்கு தமிழக அரசும் காவல்துறையும் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.
English Summary
PT krishnasamy Karur Stampede DMK MK Stalin TVK Vijay