10,000 தொண்டர்கள் நடுவே அஜித்குமார் கொல்லப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்! - தவெக விஜய் பங்கேற்பு
Protest against killing of Ajith Kumar amidst 10000 volunteers TVK Vijay participates
சமீபத்தில் சிவகங்கை மடப்புரத்தில் கோவில் காவலாளி அஜித்குமாரை காவலர்கள் விசாரணையின்போது அடித்துக்கொள்ளப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.இது தொடர்பாக 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து பல்வேறு கட்சியினரும் கண்டன போராட்டம் நடத்தினார்கள்.

இதில் சென்னையில் அஜித் குமார் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று விஜய் அறிவித்தார். ஆனால் காவலர்கள் அந்த போராட்டத்திற்கு உடனடியாக அனுமதி வழங்கவில்லை.இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கண்டன போராட்டத்திற்கு காவலர்கள் தற்போது அனுமதி வழங்கியுள்ளனர். அவ்வகையில், நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, தூர்தர்ஷன் அலுவலகம் அமைந்துள்ள சிவானந்தா சாலை பகுதியில் போராட்டம் நடத்த காவலர்கல் அனுமதித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்டத்தில் தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்வார்கள் என்று முதலில் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நாளை நடக்கும் கண்டன போராட்டத்தில் விஜய் கலந்து கொள்வார் என்று தெரியவந்துள்ளது.மேலும், விஜய் தலைமையில் நாளை காலை 10 மணிக்கு இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்றே சென்னைக்கு வந்து விட்டனர். நாளை நடக்கும் போராட்டத்தில் சுமார் 10000 பேர் பங்கேற்பார்கள் என்று தெரியவந்துள்ளது.அதுமட்டுமின்றி,தமிழக வெற்றிக் கழகம் மாநில அளவில் அதிகாரப்பூர்வமாக நடத்தும் முதல் கண்டனப் போராட்டம் இதுவாகும். இதனால் தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்க உள்ளனர்.
இதில் போராட்டத்துக்கான ஏற்பாடுகளை த.வெ.க. பொதுச்செயலாளர் என். ஆனந்த் சிறப்பாக செய்து வருகிறார்.மேலும், போராட்டத்தில் 10000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருப்பதால் அதற்கேற்ப மற்ற வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.கூடுதலாக காவலர்கள் அதிக அளவில் குவிக்கப்பட இருக்கிறார்கள்.
English Summary
Protest against killing of Ajith Kumar amidst 10000 volunteers TVK Vijay participates