கோவை மாநாட்டில் சிறுமிகளின் பதாகைகளைக் கண்டு பிரதமர் மோடி பாராட்டு! - Seithipunal
Seithipunal


கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தென்னிந்திய இயற்கை வேளாண்மை மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றிக் கொண்டிருந்தபோது, இரண்டு பள்ளிச் சிறுமிகள் உயர்த்திப் பிடித்திருந்த பதாகைகள் அவரது கவனத்தை ஈர்த்தன.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அந்தச் சிறுமிகள் பதாகைகள் ஏந்தி நின்றிருந்தனர்.

பதாகையின் வாசகம்: ஒரு பதாகையில், "நான் பொருளாதாரம் இரண்டாவது இடத்தில் இருக்கும்போது பட்டதாரி ஆவேன்; பொருளாதாரத்தில் முதலிடத்தில் இருக்கும்போது ஓய்வு பெறுவேன். இதற்காக நன்றி" என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது.

இதனைக் கவனித்த பிரதமர் மோடி, தனது சிறப்புரையின்போது அக்கூட்டத்தில் இருந்த பாதுகாவலர்களிடம், "இரண்டு சிறுமிகள் பதாகைகளை வைத்திருக்கிறார்கள். அதில் உள்ள வாசகங்களை நான் உன்னிப்பாகக் கவனித்தேன். அவற்றைச் சிறுமிகளிடம் இருந்து பெற்று என்னிடம் கொடுங்கள். பிறகு அந்தச் சிறுமிகளை நான் சந்தித்துப் பேசுகிறேன்" என்று கூறினார்.

வெகுநேரமாகக் கம்பீரமாகப் பதாகைகளை ஏந்தி நின்றிருந்த சிறுமிகளுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அதில் உள்ளதை தான் கருத்தில் கொள்வதாகவும் உறுதியளித்தார். உடனடியாக, பாதுகாவலர்கள் சிறுமிகளை அழைத்து விவரங்கள் கேட்டறிந்து, பதாகைகளைப் பெற்றுச் சென்றனர்.

இந்த மாநாட்டிற்கு வருவதற்கு முன்பு, டெல்லியிலிருந்து ஆந்திரம் சென்று புட்டபர்த்தி கோயிலில் தரிசனம் செய்த பிரதமர் மோடி, விமானம் மூலம் கோவை வந்தடைந்து மாநாட்டில் உரையாற்றினார். மேலும், இந்த மாநாட்டின் தொடக்கத்தில், பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு (பி.எம். கிஸான்) திட்டத்தின்கீழ் 21-வது தவணையை 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர் விடுவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi wish childs BJP DMK


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->