புதிய மைல்கல்லை எட்டிய பிரதமர் மோடி! இந்திரா காந்தி சாதனையை முறியடித்தார்...!
Prime Minister Modi has reached new milestone He broke Indira Gandhis record
இன்றுடன் (ஜூலை 25) 4,078 நாட்கள் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் பதவியில் இருந்து, ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதன் மூலம் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஜனவரி 24, 1966 முதல் மார்ச் 24, 1977 வரை தொடர்ந்து 4,077 நாட்கள் பிரதமர் பதவி வகித்த சாதனையை தற்போது மோடி அவர்கள் முறியடித்துள்ளார்.
மேலும், இந்திய வரலாற்றில் தொடர்ச்சியாகப் பிரதமர் பதவி வகித்தவர்களில், நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு, நரேந்திர மோடி 2வது இடத்தில் பிடித்துள்ளார்.
English Summary
Prime Minister Modi has reached new milestone He broke Indira Gandhis record