பிரதமர் மோடியுடன், பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரவுபதி முர்மு சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


பிரதமா் நரேந்திர மோடியை, பாஜக குடியரசு தலைவர் வேட்பாளா் திரௌபதி முா்மு சந்தித்தாா்.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18-ந் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடக்கிறது.

இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை (24-ந் தேதி) பாராளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், பாஜக குடியரசு தலைவர் வேட்பாளா் திரௌபதி முா்மு பிரதமா் மோடியை சந்தித்து உள்ளாா். இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட டுவிட்டா் பதிவில், "திரௌபதி முா்முவை சந்தித்தேன், அவரது ஜனாதிபதி வேட்பாளர் தோ்வானது சமூகத்தின் அனைத்துப் பிரிவினராலும் இந்தியா முழுவதும் பாராட்டப்பட்டது. அடிமட்ட பிரச்சனைகள் பற்றிய அவரது புரிதல் மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்கான பார்வை சிறப்பானது". இவ்வாறு அவா் பதிவிட்டுள்ளாா்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President candidate Draupadi Murmu meet prime minister Modi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->