முதலமைச்சர் பூரண குணமடைய ஆண்டவனை மக்கள் சார்பாகவும் வேண்டுகிறேன்! - எடப்பாடி பழனிச்சாமி
pray to God on behalf people complete recovery Chief Minister Edappadi Palaniswami
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து காலை நடைபயிற்சியின்போது மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டதாகவும், தற்போது அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண குணமடைய பிரார்த்தனை செய்வதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இவர் தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
அவ்வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்துள்ளது.
அவர் பூரண குணமடைய வேண்டும் என என் சார்பாகவும், மக்கள் சார்பாகவும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்தார்.
English Summary
pray to God on behalf people complete recovery Chief Minister Edappadi Palaniswami