மதுரையை கலக்கும் பிரியாணி அரசியல்! அமைச்சர் தியாகராஜன் ஆதரவாளர்களுக்கு நோட்டீஸ்! - Seithipunal
Seithipunal


மதுரையில் நடைபெற்ற திமுக கவுன்சிலர்களுக்கான ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர்களுக்கு மாவட்ட செயலாளர்கள் நோட்டீஸ் அனுப்பிய சம்பவம் மீண்டும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. மதுரை மாநகராட்சியில் தனது ஆதரவாளரான இந்திராணிக்கு தனிப்பட்ட செல்வாக்கு மூலம் மேயர் பதவியை அமைச்சர் தியாகராஜன் பெற்று தந்தார். 

இதனால் திமுகவில் தன்னிச்சையாக ஆதிக்கம் செலுத்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முயன்று வருகிறார். இதன் காரணமாக நகர செயலாளர் தளபதி, மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் ஆகியோர் ஒன்றிணைந்து அமைச்சர் தியாகராஜனின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

 அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் "கட்சி குப்பையாக கிடக்கிறது" என சில தினங்களுக்கு முன்பு விமர்சித்து இருந்தார். இதன் காரணமாக மதுரை திமுக நிர்வாகிகள், அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளர்கள் பலர் எம்.எல்.ஏ தளபதி பக்கம் சாய்ந்துள்ளனர். இந்த நிலையில் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்குவதற்காக மதுரையின் மூன்று மாவட்ட செயலாளர்களும் ஒன்றிணைந்து ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, எம்எல்ஏ தளபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராம், முன்னாள் எம்எல்ஏ வேலுச்சாமி ஆகியோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் மொத்தம் உள்ள 69 திமுக மாநகராட்சி கவுன்சிலர்களில் அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளரான மேயர் இந்திராணி, மத்திய மண்டல தலைவர் பாண்டிய செல்வி, பகுதி செயலாளர் போஸ் முத்தையா உட்பட ஒன்பது கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். 

இந்த நிலையில் மதுரை நகர திமுக சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திமுக கட்சி சார்பில் மாவட்ட கூட்டம் நடத்தினால் அமைச்சரே ஆனாலும் பங்கேற்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால் அமைச்சர் பழனிவேல் தியாகராஜரின் ஆதரவாளர்கள் பங்கேற்காமல் இருந்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்காதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுதால் அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளர்கள் கடும் கலக்கத்தில் உள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து மதுரை பாண்டிக்கோயில் ரிங் ரோடு அருகே இன்று பிரியாணி விருந்துக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். வரும் நவம்பர் 29ஆம் தேதி திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடப்பதை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. 

திமுக தலைவராக ஸ்டாலின் மீண்டும் ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதிற்காக அமைச்சர் தியாகராஜன் மதுரையில் பிரம்மாண்ட பிரியாணி விருந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மூர்த்தி, எம்எல்ஏ தளபதி உட்பட மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் புறக்கணித்திருந்தனர். இதற்கு போட்டியாகவே இன்று பிரியாணி விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Power conflict between Madurai district DMK officials


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->