தமிழகத்தில் 2 இடங்களில் தேர்தல் ஒத்திவைப்பு.. மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தகவல்.!! - Seithipunal
Seithipunal


தமிழக நகர்புற மக்கள் பெரிதும் எதிர்பார்த்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையில் வருகின்ற 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. 

தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் காலை முதல் மாலை 6 மணி வரை தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாரடைப்பு மற்றும் உடல்நல குறைவு போன்ற காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை தமிழகம் முழுவதும் 6- க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மரணமடைந்துள்ளார். அந்த பகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த வகையில் ஈரோடு மாவட்டம் பவானி அம்மாபேட்டை பேரூராட்சியில் இரண்டாவது வார்டு திமுக சார்பில் சித்து ரெட்டி என்பவர் போட்டியிட்டார். கடந்த ஒரு வாரமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட சித்து ரெட்டி நேற்று காலை திடீரென மாரடைப்பால் காலமானார். 

இதற்கு முன்னதாக ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே அத்தாணி பேரூராட்சியில் 3வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட ஐயப்பன் இரண்டு நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமானார். அடுத்தடுத்து வேட்பாளர்கள் உயிரிழந்ததை அடுத்து, அந்த இரண்டு வார்டுகளில் வாக்குப் பதிவு ரத்து செய்யப்பட்டதாக மாவட்ட தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

postponement of elections in 2 wards


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->