கோவையில் பரபரப்பு.. போஸ்டர் விவகாரம் தொடர்பாக பா.ஜ.க - திமுகவினரிடையே தள்ளுமுள்ளு.! - Seithipunal
Seithipunal


கோவை - அவிநாசி சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்துக்காக நூற்றுக்கும் மேற்பட்ட தூண்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தத் தூண்களில் அனைத்து கட்சியினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் அனைத்துக் கட்சி சார்பில் கூட்டம் நடத்தப்பட்டது. 

இந்த கூட்டத்தில் பொது இடங்கள் மற்றும் தூண்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். 

இந்நிலையில், 10 நாட்களுக்கு மேலாகியும் போஸ்டர்கள் அகற்றப்படாததைக் கண்டித்து கோவை மாவட்ட பா.ஜ.கவினர் நேற்றிரவு 10 மணி முதல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கோவை மாவட்ட போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பாலத்தின் தூண்களில் ஒட்டப்பட்டிருந்த தி.மு.க. போஸ்டர்களை கிழித்தெறிந்தும், அரசைக் கண்டித்தும் கோஷம் எழுப்பினர். 

இதனால் போலீசாருக்கும், கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போஸ்டர்களை கிழித்த பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கிழித்தெறிந்த போஸ்டர்களுக்கு பதிலாக தி.மு.க.வினர் புது போஸ்டர்களை ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Poster issue in covai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->