#தமிழகம் || நாடக காதலன் மிரட்டல்., சிறப்பான சம்பவத்தை செய்த பள்ளி மாணவி.! - Seithipunal
Seithipunal


சென்னை அருகே தனியார் பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி தற்கொலை மிரட்டல் விடுத்த நாடக காதலன் ஒருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னை பொன்னேரி அடுத்த சயனாவரம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ரகு (23வயது) என்பவர் காதலிப்பதாக மாணவியை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

மேலும் மாணவி காதலிக்க வற்புறுத்தி, மாணவியின் கையை பிடித்தும், காலில் விழுந்தும் மன்றாடி உள்ளார். உட்ச பட்சமாக தனது கை, கால்களில் பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் பயந்து போன பள்ளி மாணவி தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே, பெற்றோர்கள் பொன்னேரி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் நாடக காதலன் ரகு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ரகுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

நாடக காதலனின் தற்கொலை மிரட்டலை உடனடியாக பெற்றோரிடம் பள்ளி மாணவி தெரிவித்ததை பலரும் பாராட்டி வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவிகள் இது போன்ற மிரட்டல், உருட்டல்களை உடனிடியாக தங்களது பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ponner private school girl


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->