செம்மண் குவாரி வழக்கு || பொன்முடி மகன் ஆஜராகாததால் விசாரணை ஒத்தி வைப்பு.!!
Ponmudi son gowtham sigamani not appear trial was adjourned
முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம சிகாமணி மீதான செம்மண் குவாரி வழக்கு இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது அவர் ஆஜராகாததால் வரும் ஜனவரி 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கவுதம சிகாமணி மீதி குற்றச்சாட்டு பதிவு நடைமுறை தொடங்க இருந்த நிலையில் அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு கால கட்டத்தில் பொன்முடி கனிம வளத்துறை அமைச்சராக இருந்த போது அவருடைய மகன் கவுதம சிகாமணி மற்றும் அவருடைய நண்பர்கள் பெயரில் செயல் பட்டுவந்த செம்மண் குவாரியில் இருந்து அதிகளவு செம்மண் அள்ளி தமிழக அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக பொன்முடி மற்றும் அவருடைய மகன் கௌதம சிகாமணி, அவருடைய நண்பர்கள் மீது விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன் கௌதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் திமுக எம்பி கவுதம சிகாமணி, அவருடைய நண்பர் கோபிநாத் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.
இந்த குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடைமுறை இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்க இருப்பதாகவும், கவுதம சிகாமணி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அனால் இன்றி கவுதம சிகாமணி ஆஜராகாததால் வழக்கு ஜனவரி 24ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
English Summary
Ponmudi son gowtham sigamani not appear trial was adjourned