வசமாக சிக்கிய பொன் மாணிக்கவேல்., சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக இருந்த பொன் மாணிக்கவேலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீது, சிபிஜ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாஷா தொடர்ந்த வழக்கில், குற்றவாளிகளை தப்ப வைக்க போலீசார் மீதும், அறநிலைய துறையினர் மீதும் பொய் வழக்கு பதிந்ததாகவும், உயர் நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தை பொன் மாணிக்கவேல் தவறாக பயன்படுத்தியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும், சிலை கடத்தல்காரர்களுடன் கூட்டு சேர்ந்து, சிலை தடுப்பு பிரிவினர் மற்றும் இந்து அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எதிராக பொன் மாணிக்கவேல் பொய் வழக்குத் தொடுத்தார் என்றும் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றத்தில், பொன் மாணிக்கவேல் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்கிறார் என்று புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, சிலைகடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் மீதான புகாரை, சிபிஐ விசாரணை செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pon manickavel case chennai hc order for cbi investigation


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->