ரேஷன் அரிசியை எந்த அமைச்சராவது சாப்பிடுவார்களா? பரந்தூரில் திமுக அரசின் பேராசை - சீமான் பரபரப்பு பேட்டி!
Political Greed Ration Rice Seeman Slams the Status Quo
தாம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், வழக்கமான தனது அதிரடிப் பாணியில் அரசு மற்றும் அரசியல் சூழல் குறித்துப் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
ரேஷன் அரிசி தரம்: அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை எந்த அமைச்சராவது சாப்பிடுவார்களா? என அவர் கேள்வி எழுப்பினார்.
கடந்த 60 ஆண்டுகளாகியும் தலைநகர் சென்னையில் மழைநீர் வடிய உரிய ஏற்பாடுகளைச் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
இந்தியாவில் தனக்குப் போட்டியாக எந்தவொரு அரசியல் கட்சியும் இல்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
சுற்றுச்சூழல் அரசியல்: இந்த பூமிக்காக அரசியல் பேசும் ஒரே தலைவன் தான் மட்டும்தான் எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
பறந்தூர் விவகாரம்:
"பரந்தூரில் புதிய விமான நிலையம் கட்ட வேண்டும் என்பது அரசின் பேராசை" என்று அவர் கடுமையாகச் சாடினார்.
English Summary
Political Greed Ration Rice Seeman Slams the Status Quo