சேலத்தில் அரசியல் பரபரப்பு! எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த முன்னாள் அமைச்சர்கள்...! - முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறதா?
Political excitement Salem Former ministers meet Edappadi Palaniswami important decisions being taken
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தலைநகர் சென்னையிலிருந்து தனது சொந்த ஊரான சேலத்திற்கு வருகை தந்தார்.

நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது இல்லத்தில் முகாமிட்டுள்ள அவர், இன்று ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டப்பேரவைத் தொகுதியிலும், நாளை (மார்ச் 8) பெருந்துறை மற்றும் பவானி ஆகிய பகுதிகளிலும் சூறாவளிப் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
இதற்கிடையே, தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இன்று காலை அவரது இல்லத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் மற்றும் பரஞ்ஜோதி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்துத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.
English Summary
Political excitement Salem Former ministers meet Edappadi Palaniswami important decisions being taken