அரசியல் களம் சூடு...! அ.ம.மு.க குறிவைக்கும் முக்கிய தொகுதிகள் வெளியீடு...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டமன்றத் தேர்தல் பரபரப்பில், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க-வுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்தக் கட்சி போட்டியிட விரும்பும் 14 முக்கிய தொகுதிகளின் உத்தேச பட்டியல் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

ஏற்கனவே இந்த கூட்டணியில் பா.ஜ.க-க்கு 27 இடங்களும், பா.ம.க-க்கு 18 இடங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையில், அ.ம.மு.க சென்னை சைதாப்பேட்டை, தஞ்சாவூர், மதுரை மத்தியம் போன்ற முக்கிய நகர்ப்புற மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தொகுதிகளை குறிவைத்து பட்டியல் தாக்கல் செய்துள்ளது.

மேலும் திருச்சி மேற்கு, அரூர், நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், பெரியகுளம், காரைக்குடி,திருவையாறு,மதுரை மத்திய தொகுதி, ஸ்ரீவைகுண்டம், பூவிருந்தவல்லி, சோளிங்கார்/திருப்பத்தூர்,  மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, த.மா.கா, ஐ.ஜே.கே போன்ற கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடும் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அ.ம.மு.க முன்வைத்துள்ள 14 தொகுதிகளில் இறுதியாக எந்த 11 தொகுதிகள் கிடைக்கும் என்பது அரசியல் அரங்கில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Political arena heats up Key constituencies targeted by AMMK released


கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக விஜய் தனித்து போட்டியிடுவது யாருக்கு சாதகம்?!




Seithipunal
--> -->