இன்றைய பிரதமர் மோடியின் 'மன் கி பாத்' உரையில் இடம்பெற்ற தமிழக கிராமம்.! அசத்தலான சாதனை.! - Seithipunal
Seithipunal


நவீன தொழில்நுட்பத்துடன் காஞ்சிரங்கால் ஊராட்சியில் மக்கும் குப்பைகள் (biodegradable waste) மூலம் மக்களுக்கு அத்தியாவசிய தேவையான மின்சாரம் தயாரிக்கும் திட்டம் துவக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

சிவகங்கை மாவட்டம், காஞ்சிரங்கால் ஊராட்சியில், அரசின் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூர்பன் திட்டத்தின் கீழ் 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கழிவுகள் (biodegradable waste) மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 

இந்த திட்டத்தின் மூலம், 
பயன்பாடற்ற குப்பைகள் அப்புறப்படுத்தப்படுகிறது. 
இந்த திடக்கழிவு மேலாண்மையின் மூலம் பயோகேஸ் தயாரித்து அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. 
இதை இருந்து வெளிவரும் கழிவுப்பொருள் விவசாயத்திற்கு நுண்ணுயிர் சத்தாக பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், இன்றைய 79வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் உரையில், தமிழக கிராம் ஒன்றை பாராட்டி பேசினார். அதில், "சிவகங்கை மாவட்டம் அடுத்துள்ள காஞ்சிரங்கால் கிராமத்தில், கழிவுகளையும் செல்வமாக மாற்ற முடியும் என்று சாதனை செய்துள்ளனர்." என்று பிரதமர் மோடி பாராட்டி பேசினார்.

மேலும், பிரதமரின் இன்றைய உரையில், "ஒவ்வொருவரின் பங்களிப்பின் மூலம் இந்தியா பல உச்சங்களை அடைய முடியும்4 தசாப்தங்களுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய வீரர்கள் திறமையை நிரூபித்துள்ளனர்

இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டு மீதான காதலையும், ஆர்வத்தையும் பெருமளவில் பார்க்க முடிகிறது - பிரதமர் மோடி பேச்சுபேசியதாவது, "நான்கு தசாப்தங்களுக்கு பிறகு ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் இந்திய வீரர்கள் தங்களது திறமையை நிரூபித்துள்ளனர். இன்றைய இளைஞர்களிடம் விளையாட்டு மீதான காதலையும், ஆர்வத்தையும் பெருமளவில் நாம் பார்க்க முடிகிறது. 

நாட்டில் உள்ளே அனைத்து கிராமங்களிலும் அதிகப்படியான விளையாட்டு போட்டிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டும். ஒவ்வொருவரின் பங்களிப்பின் மூலமே இந்தியா பல உச்சங்களை அடைய முடியும். இன்று ஒவ்வொரு குடும்பமும் விளையாட்டை பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொரு பண்டிகையின் பின்னாலும் ஒரு செய்தி மறைந்திருக்கிறது. நாம் நமது பண்டிகைகளின் பின்னால் உள்ள அறிவியலை அறிந்து கொண்டாட வேண்டும்" என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM MODI WISH TO KANJIRANGAL VILLAGE


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal