சமூக நீதி, தொண்டு நிறைந்த வாழ்க்கை... காமராஜரின் பிறந்த நாளில் பிரதமர் மோடி மரியாதை!
pm modi kamarajar birth day
தமிழக முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள், கல்வி வளர்ச்சி நாளாக இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரை நினைவுகூரி புகழாரம் சூட்டினர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சமூக ஊடகமான ‘எக்ஸ்’ தளத்தில் தனது மரியாதையை தெரிவித்தார்.
அதில், “பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளில் அவருக்கு வீரவணக்கம். சுதந்திரப் போராட்டத்தில் அவர் வகித்த பங்கு முக்கியமானது. சுதந்திரத்துக்குப் பிறகு, நாட்டின் முன்னேற்றத்தில் அவர் அளித்த வழிகாட்டுதலும், பொறுப்புடனான அரசியல் வாழ்க்கையும் எண்ணிக்கரையற்ற மக்களுக்கு வழிகாட்டியது.
அவரது உயர்ந்த சிந்தனைகள், தனி நபரையும் சமூகத்தையும் உயர்த்த விரும்பும் மனப்பான்மை, சமூக நீதி குறித்த உறுதியான நோக்கம் இன்றும் அனைவருக்கும் ஊக்கமாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
காமராஜரின் அரசியல் தார்மீகத்தையும், கல்விக்காக செய்த தொண்டையும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
pm modi kamarajar birth day