கோவை வரும் மோடி., தமிழகம் புதுவையில் தனித்து இறங்கும் பாஜக.!  - Seithipunal
Seithipunal


தமிழகம் புதுவையில் அரசு நிகழ்ச்சிகளுக்கும், தேர்தல் பிரச்சாரம் செய்யவும் பிரதமர் மோடி இன்று புதுச்சேரி மற்றும் தமிழகம் வருகிறார். 

தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கி வைக்கவும், கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவும், பிரதமர் மோடி இன்று மாலை கோவை வருகிறார். 


 
இன்று காலை 7.45 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி, காலை 10.25 மணிக்கு சென்னை வருகிறார். பின் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்ல உள்ளார். புதுவையில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பின்னர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

பின்னர் பகல் 2.10 மணிக்கு சென்னை வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் மாலை 3.35 மணிக்கு கோவைக்கு வருகிறார். பாஜக சார்பில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட உள்ளது.

கொடிசியா அரங்கில் பிரதமர் ரூ.12,400 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். குறிப்பாக நெய்வேலியில் புதிய அனல்மின் திட்டத்தை நாட்டுக்கு மோடி அர்ப்பணிக்கிறார்.

பின்னர் பாஜக சார்பில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசுகிறார். இந்த கூட்டத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள், தொண்டட்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். இதை கூட்டணி கட்சிகளுக்கு அழிப்பு இல்லை.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM MODI in Covai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->