சில வக்கிர சக்திகள்... மறைமுகமாக இண்டி கூட்டணியை வெளுத்து வாங்கிய மோடி!  
                                    
                                    
                                   PM Modi Condemn to INDI Alliance 
 
                                 
                               
                                
                                      
                                            இன்று அக்டோபர் 31, இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாளாகும், இது தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. 
இதற்கான நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், கேவாடியாவில் நடைபெற்ற ஒற்றுமைப் பேரணியில் அவர் உரையாற்றினார். 
அப்போது அவர் கூறியதாவது, "நாடுகள் பிரிந்து செல்கின்றன, ஆனால் இந்தியா நெருங்கி வருகிறது. இது புதிய வரலாறு எழுதப்படுகிறது. உலகம் இந்தியாவின் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கிறது என்பதை கவனிக்கிறது, எனவே நமது ஒற்றுமையை பாதுகாக்க வேண்டும்.
சில வக்கிர சக்திகள் இந்தியாவின் எழுச்சியால் கவலைப்படுகிறார்கள். அவர்கள் நிலயற்ற தன்மை மற்றும் அராஜகத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர். சாதியின் பெயரால் மக்களை பிரித்து, இந்தியாவின் சமூகத்தை பலவீனப்படுத்த முயல்கிறார்கள்" இன்றி பிரதமர் மோடிக்கு தெரிவித்தார்.
பிரதமர் மோடியின் இந்த விமர்சனம் இண்டி கூட்டணி தலைவர்களை தான் என்று சமூக வலைத்தளங்களில் அரசியல் விமர்சகர்கள் கருது தெரிவித்து வருகின்றனர்.
                                     
                                 
                   
                       English Summary
                       PM Modi Condemn to INDI Alliance