தேர்தல் நெருங்கும் நிலையில் திடீர் திருப்பம்: நான் விலகுகிறேன்.,  கார்ப்பரேட் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அதிகாரபூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பஞ்சாப் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. முதலமைச்சராக அமரீந்தர் சிங் இருந்து வருகிறார். வரும் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பஞ்சாப் மாநில முதலமைச்சரின் ஆலோசகராக பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் அந்த பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறா.ர் இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை அமைப்பதற்கும், ஆட்சியை கவிழ்ப்பதற்கும் தனியார் ஆலோசகராக செயல்பட்டு வரும் பிரசாந்த் கிஷோர், அண்மையில் நடைபெற்ற இரண்டு மாநில சட்டமன்ற தேர்தல்களில் வெற்றியை தேடி தந்துள்ளார்.

அதில், மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜியை முதலமைச்சராக மீண்டும் வெற்றிபெற வைத்துள்ளார். இதேபோல், தமிழகத்தில் மு க ஸ்டாலின் முதலமைச்சராக வெற்றி பெறச் செய்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த மே மாதம் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அமரீந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டார். கௌரவ சம்பளமாக ஒரு ரூபாய் மட்டும் கொடுத்து விட்டு, அவருக்கு கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் கூடிய பதவியான முதலமைச்சரின் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டது.

இதற்கிடையே, பல்வேறு அரசியல் நிகழ்வுகள் அரங்கேறியது. கார்ப்பரேட் அரசியல் ஆலோசகர் என்ற வகையில் பிரசாந்த் கிஷோரை பல அரசியல் கட்சி தலைவர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அமரீந்தர் சிங்கின் ஆலோசகர் பதவியிலிருந்து பிரசாந்த் கிஷோர் விலகியதாக பிரசாந்த் கிஷோர் திடீரென அறிவித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு பிரசாந்த் கிஷோர் ஆலோசகராக செயல்பட மாட்டாரா? என்று அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pirasanth kishore announce


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal