அண்ணாமலை மீது தேர்தல் ஆணையத்தில் புகார் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


வருகின்ற ஏப்ரல் 19-ஆம் தேதி 22 மாநிலங்களில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். 

அந்த வகையில், கோயம்புத்தூர் மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அண்ணாமலை, தேர்தல் நடத்தை விதிகளை மீறி வருகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்த புகாரில், “நேற்று இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் விதிகளை மீறி கோவை ஆவாரம்பாளையம் பகுதியில், ஒலிபெருக்கியில் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளை தொடர்ந்து மீறி வரும் அண்ணாமலை மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pettition against tn bjp leader annamalai


கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?Advertisement

கருத்துக் கணிப்பு

மாணவர்களின் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியிருப்பது பற்றிய உங்கள் கருத்து?
Seithipunal
--> -->