பீகார்: கொலை வழக்கில் சிக்கிய பாஜக கூட்டணி வேட்பாளருக்கு 15 நீதிமன்ற காவல்!
Patna court remands JDU candidate Jan Suraaj Party man murder case
பீஹாரின் மொகாமா தொகுதியில் ஜன் சுராஜ் கட்சி தொண்டர் துலார்சந்த் யாதவ் கொல்லப்பட்ட வழக்கில், சர்ச்சைக்குரிய முன்னாள் எம்.எல்.ஏ. அனந்த் சிங்கும், அவரது இரு கூட்டாளிகளும் 14 நாள் நீதிமன்றக் காவலில் அனுப்பப்பட்டுள்ளனர்.
பீஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி மாநிலம் முழுவதும் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மொகாமா தொகுதியில் ஜன் சுராஜ் கட்சியின் வேட்பாளராக பிரியதர்ஷி பியூஷ் போட்டியிடுகிறார். அவரது மாமாவும் கட்சித் தொண்டருமான துலார்சந்த் யாதவ், கடந்த வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தேர்தல் சூழலை பதற்றமாக்கியது. விசாரணை மேற்கொண்ட பாட்னா காவல்துறை, சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. அனந்த் சிங்கை சனிக்கிழமை இரவு கைது செய்தது. அவருடன் இருந்த இரு நெருங்கிய உதவியாளர்களும் கைது செய்யப்பட்டனர்.
அனந்த் சிங், முன்னதாக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர். பின்னர் ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்து மொகாமா தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது அவரது மனைவி நீலம் தேவி அதே தொகுதியின் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
துலார்சந்த் யாதவ் கொலை வழக்கு மாநில அரசியலில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலை முன்னிட்டு வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. meanwhile, நீதிமன்றம் அனந்த் சிங் மற்றும் அவரது கூட்டாளிகளை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கியுள்ளது.
English Summary
Patna court remands JDU candidate Jan Suraaj Party man murder case