'அமித்ஷாவின் கைகள் நடுங்கின': ராகுல் காந்தி விமர்சனம்!
Parliament Amit shah RahulGandhi congress
மக்களவையில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சு மற்றும் உடல்மொழி குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களிடம் விமர்சித்துள்ளார்.
அமித் ஷா நேற்று கடும் மன அழுத்தத்தில் இருந்தார் என்று குறிப்பிட்ட ராகுல் காந்தி, "நேற்று அமித் ஷா மிகவும் பதட்டமாக காணப்பட்டார். அவர் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அவரது கைகள் நடுங்கின. அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறார் என்பதை நேற்று அனைவரும் பார்த்தனர்" என்று தெரிவித்தார்.
மேலும், தான் எழுப்பிய கேள்விகளுக்கு அமித் ஷா நேரடியாகப் பதிலளிக்கவில்லை என்றும், அதற்கு ஆதரவாக அவர் எந்த ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை என்றும் ராகுல் குற்றம் சாட்டினார்.
விவாதத்திற்கு சவால் விடுத்ததாகக் கூறிய ராகுல் காந்தி, "நான் அவருக்கு நேரடியாக ஒரு சவால் விடுத்தேன். 'களத்துக்கு வாருங்கள், எனது அனைத்து செய்தியாளர் சந்திப்பு பற்றியும் பாராளுமன்றத்தில் விவாதிக்கலாம்' என்று கூறினேன். ஆனால், எனக்கு எந்தப் பதிலும் வரவில்லை" என்றும் தெரிவித்தார்.
அமித் ஷாவின் பதட்டமும், நேரடியான பதிலைத் தவிர்த்ததும், அவர் மன அழுத்தத்தில் இருப்பதையே காட்டுகிறது என்று ராகுல் காந்தி தனது உரையில் குறிப்பிட்டார்.
English Summary
Parliament Amit shah RahulGandhi congress