பா.ஜ.கவுடன் கூட்டணி.!! மீண்டும் பெரம்பலூரில் களமிறங்கும் தி.மு.க எம்.பி.!! 
                                    
                                    
                                   Parivendar contest in Perambalur in NDA alliance 
 
                                 
                               
                                
                                      
                                            நாடாளுமன்ற பொது தேர்தல் தேதி மார்ச் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணி களில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதிவேலையில் பாஜக தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளது. பாஜக தலைமையிலான கூட்டணியில் சிறு சிறு கட்சிகளை இணைத்து எதிர்வரும் நாடாளுமன்றத்தில் பொதுத் தேர்தலை சந்திக்க தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

அதில் ஒரு பகுதியாக கடந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் என்கிற பச்சை முத்து உதயசூரியன் சின்னத்திலபெ ரம்பலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 இந்நிலையால் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியில் மீண்டும் களமிறங்குகிறது. இந்த முறையும் பாரிவேந்தரே மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
                                     
                                 
                   
                       English Summary
                       Parivendar contest in Perambalur in NDA alliance