இணையத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் - மாணவர்களுக்கு பிரதமர் மோடியின் ‘வெற்றி’ சூத்திரம்!
Pariksha Pe Charcha 2026 PM Success Formula
புதுடெல்லியில் நடைபெற்ற 'பரிக்ஷா பே சர்ச்சா 2026' நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார். தேர்வை எதிர்கொள்வது மற்றும் தொழில்நுட்பக் கையாளுதல் குறித்து அவர் வழங்கிய முக்கிய அறிவுரைகள்:
இணையமும் டேட்டாவும்:
இந்தியாவில் டேட்டா மலிவானது என்பதற்காகச் சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
உங்களின் வாழ்க்கை மற்றும் கல்வித் திறன்களை மேம்படுத்துவதற்கு மட்டுமே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துங்கள்.
கல்வி மற்றும் இலக்கு:
கல்வி ஒருபோதும் சுமையாக இருக்கக்கூடாது. அரை மனதுடன் ஈடுபடும் செயல் முழுமையான வெற்றியைத் தராது.
உங்கள் இலக்குகள் சவாலானதாக இருக்க வேண்டும்; அதே சமயம் எட்டக்கூடியதாகவும் இருக்க வேண்டும். முதலில் மனதைக் கட்டுப்படுத்தி, பின் ஒருமுகப்படுத்தினால் பாடங்கள் எளிதாகும்.
கேமிங் மற்றும் சூதாட்ட எச்சரிக்கை:
"பணத்திற்காக விளையாடும் ஆன்லைன் சூதாட்டங்கள் ஒருவரை அழிவிற்கே இட்டுச் செல்லும். நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவே ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக நான் சட்டம் இயற்றியுள்ளேன்."
கேமிங் என்பது வேகம் மற்றும் விழிப்புணர்வை வளர்க்கும் ஒரு திறனாக இருக்கலாம். ஆனால், அதைச் சுய வளர்ச்சிக்காக மட்டுமே கையாள வேண்டும்; நேரத்தை விரயம் செய்யும் கருவியாக அல்ல.
வாழ்க்கையில் எப்போதும் ஒரு வெற்றியாளராகத் திகழ, மனக்கட்டுப்பாடும் சரியான திட்டமிடலும் அவசியம் எனப் பிரதமர் மோடி மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.
English Summary
Pariksha Pe Charcha 2026 PM Success Formula