எடப்பாடி பழனிசாமிக்கு என் ஆதரவு.! முன்னாள் அமைச்சர் தகவல்.! - Seithipunal
Seithipunal


அதிமுக மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலனோர், இணை ஒருங்கிணைப்பாளர், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

அதிமுகவில் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 64 மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு தொலைபேசி மூலமாகவும், நேரிலும் வந்து ஆதரவு தெரிவித்து உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமியின் ஒற்றை தலைமையில் அதிமுக செயல்பட வேண்டும் என்பதே எனது  ஆசை என்று முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், அதிமுகவில் 90% மாவட்டச் செயலாளர்கள் ஒற்றை தலைமையையே எதிர்பார்க்கின்றனர் என்றும், கட்சியை காப்பாற்றும் ஒருவருக்காக, மற்றொருவர் தலைமையை விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் ராஜன் செல்லப்பா தெரிவித்திருந்தார். 

அதிமுகவின் ஒற்றை தலைமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி என்று நேற்றே அக்ரி கிருஷ்ணமூர்த்தி முழமிட்டு இருந்தார்.

முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் யார் வேண்டுமானாலும் வரட்டும், ஆனால், எனக்கு அதிமுக அவைத்தலைவர் பதவி வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ., அன்பழகன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

paranjothi suport to edapadi palanisami


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->