பான் மசாலா வருவாய்: மாநிலங்களுக்கும் பகிர்வு உறுதி...! - நிதி மந்திரி நிர்மலா சீதராமன் அறிவிப்பு - Seithipunal
Seithipunal


புகையிலை, பான் மசாலா மற்றும் ஆடம்பரப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி. ஈடு செய்யும் செஸ் காலாவதியானதைத் தொடர்ந்து, அதற்குப் பதிலாக புதிய வரியை அறிமுகப்படுத்த இரண்டு முக்கிய மசோதாக்கள் கடந்த 1ஆம் தேதி மக்களவையில் முன்வைக்கப்பட்டன.

அதில் பான் மசாலா போன்ற பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் “சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ்” மசோதா நேற்று மக்களவையில் விவாதத்துக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

விவாதத்தை தொடங்கிய நிதி அமைச்சர் நிர்மலா சீதராமன், மசோதாவின் நோக்கத்தை விளக்கி கூறியதாவது,"பான் மசாலா மீது கலால் வரி விதிக்க இயலாத சூழல் தொடர்கிறது. எனவே, இந்தப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.-யுடன் சேர்த்து உற்பத்தி அளவை அடிப்படையாகக் கொண்ட ஒரு தனி செஸ் விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இது பாவப் பொருட்களின் நுகர்வை கட்டுப்படுத்த உதவும்," என்றார்.மேலும்,"இந்த புதிய செஸ் அத்தியாவசியப் பொருட்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தாது.வசூலிக்கப்படும் வருவாயின் ஒரு பகுதி மாநிலங்களுக்கு சுகாதார விழிப்புணர்வு திட்டங்கள் மற்றும் சுகாதாரத் திட்டங்களை முன்னேற்ற பயன்படுத்தப்படும்.

தற்போது நடைமுறையில் இருக்கும் 40% ஜி.எஸ்.டி. அதேபடி நீடிக்கும்; அதன் மேலாக பான் மசாலா உற்பத்தியாளர்களின் உற்பத்தித் திறனை மையமாக வைத்து புதிய செஸ் வசூலிக்கப்படும்.

இவ்வாறு இந்த மசோதா, சுகாதாரத் துறையும் தேசிய பாதுகாப்புத் துறையும் தேவையான நிதி ஆதாரத்தை தொடர்ந்து பெறுவதற்கான நிலையான வளஊற்று ஆக இருக்கும் என அவர் தெளிவுபடுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pan Masala revenue Sharing assured states too Finance Minister Nirmala Sitharamans announcement


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->