#திருவண்ணாமலை அருகே பதற்றம் : 400 போலீசார் குவிப்பு., கிணற்றில் கண்டெடுக்கப்பட்ட பிணம்.., விசிக சாலை மறியல்.!
paiyanur young man dead issue
திருவண்ணாமலை அருகே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞர், சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவத்தால், அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலை வருகிறது. இதன் காரணமாக 400க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம், பையூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவன் என்கின்ற இளைஞரை, இரு நாட்களுக்கு முன்பு சிலர் அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது.

பின்னர் அந்த இளைஞர் வீடு திரும்பாத நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும், அந்த இளைஞரின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சாத்தனூர் கிராமம் அருகே உள்ள கிணற்றில் அந்த இளைஞரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக இந்த இளைஞரை வேறு சமூகத்தை சேர்ந்த சிலர் அடித்து கொலை செய்ததாக புகார் எழுந்துள்ளது.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மூன்று பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதிகள் பதட்டமான சூழ்நிலை நிலவி வருவதால், 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

English Summary
paiyanur young man dead issue