ரவுடிகளின் கூடாரமா பாஜக? கட்சியில் இணைந்த படப்பை குணாவுக்கு முக்கிய பதவி! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்த மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி படப்பை குணா என்கிற குணாசேகரன் காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது, அடிதடி, சிறு குறு தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை மிரட்டுவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது கொலை, கொள்ளை முயற்சி, ஆள் கடத்தல் என 48 வழக்குகள் நிலுவையில் உள்ளது. 

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடி குணா எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக நிலையில் அவர் ஜாமானில் விடுவிக்கப்பட்டுள்ளார். இவருடைய மனைவி எல்லாம்மாள் காஞ்சிபுரம் பாஜக மாவட்ட பொறுப்பில் இருந்து வரும் நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய கவுன்சிலராகவும் பதவி வகிக்கிறார்.

இதற்கிடையே பிரபல ரவுடி படப்பை குணாவுக்கு பாஜகவின் முக்கிய பதவி வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் காஞ்சிபுரம் மாவட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ரவுடி சூர்யாவை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் திடிரென தமிழக பாஜவில் இணைந்ததோடு தமிழக பாஜக பட்டியல் அணியில் மாநில இணை செயலாளர் பதவி வழங்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தற்போது ரவுடி குணாவும் பாஜகவில் இணைந்த பிறகு மாவட்ட பொறுப்பாளர் பதவி அளித்திருப்பது பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து ரவுடிகளுக்கு பாஜகவின் முக்கிய பதவிகள் வழங்குவது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் தங்களை காத்துக் கொள்ள தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருவதால் ரவுடிகளின் கூடாரமாக பாஜக மாறி வருகிறதா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுதுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PadappaiGuna appointed as Kanchipuram bjp OBC wing president


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->