சேலத்தில் தேர்தல் புயல்.. ஓரே மேடையில் "Modi, OPS, TTV".. பாஜகவில் மாஸ்டர் ப்ளான்.!! - Seithipunal
Seithipunal


பாஜக தலைமையிலன தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ் அணி மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இடம்பெறுவது உறுதியாகி உளளதால் சேலத்தில் நாளை நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வழியாக உள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவையில் பாஜக சார்பில் நடைபெறும் பேரணியில் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து சேலத்தில் நாளை நடைபெறும் பொது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்வதால் அதற்கான ஏற்பாடுகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. 

இந்த பொதுக் கட்டத்தில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களையும் பங்கேற்க வைப்பதற்கான முயற்சிகளில் பாஜக ஈடுபட்டு உள்ளது. குறிப்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுசசெயலாளர் டிடிவி தினகரன் ஆகியோருடன் பாஜகவின் கூட்டணி கட்சி‌ தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர். 

அதேபோன்று பாஜக சார்பில் தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் டிடிவி தினகரன் பங்கேற்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு கிளப்பி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ops TTV participate in Modi public meeting in Salem


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->