சசிகலா அதிமுக உறுப்பினர் தான்.. ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்.! - Seithipunal
Seithipunal


செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர் கோவை செல்வராஜ், மரியாதைக்குரிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அவரோடு இருப்பவர்களும் திருந்திக் கொண்டு இந்த கட்சியை அழிக்காமல் காப்பாற்ற வேண்டும்.

அம்மா சொன்ன நூறாண்டுகளானாலும் மக்கள் செல்வாக்கு இருப்பதற்கு, அம்மா அவர்கள் காப்பாற்றி கொடுத்த கட்சி, அந்த கட்சியை காப்பாற்றுவதற்கு பதிலாக ஏன் அழிக்கிறீர்கள்.? கெடுக்கிறீர்கள்.? என்று கேட்கிறோம்.

சசிகலா அதிமுகவில் இப்போதும் உறுப்பினராக இருக்கிறார்கள், இன்று வரை எல்லா தொலைக்காட்சியிலும் சொல்லும்போது அவர்களை தற்காலிக பொதுச்செயலாளர் என்ற பதவியில் இருந்து தான் எடுத்தோமே ஒழிய, கட்சியினுடைய உறுப்பினர் தான் அவர்கள்.

அதனால் அவர்கள் அதிமுக உறுப்பினராக இருக்கும்போது புதிதாக வந்து இணைய வேண்டியது இல்லை, அவர்களாக சுற்று பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். கட்சியினுடைய உறுப்பினராக இருக்கின்ற காரணத்தினால் எப்போதும் போல இருப்பார் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

OPS supporter kovai Selvaraj speech about EPS and Sasikala


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->