ஓ.பன்னீர்செல்வம் திடீர் ஆலப்புழா பயணம்...! மகனுடன் கோவில் தரிசனத்தில் என்ன ரகசியம்...?
OPS sudden trip to Alappuzha What secret behind visiting temple son
தேனியில் போடி பகுதியில் அமைந்துள்ள தனது கட்சி அலுவலகத்திற்கு இன்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார்.
அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது,"சந்திர கிரகணம் சிறப்பாக நிறைவடைந்தது. அதனால் கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள சக்குளத்துக்காவு பகவதியம்மன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளேன்.

திரும்பி வந்த பின் உங்களை மீண்டும் சந்திக்கிறேன்” என்று தெரிவித்தார்.மேலும், அவரிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த, “அ.தி.மு.க.-வில் சிலர் கட்சியை சீர்குலைக்க முயற்சி செய்கிறார்கள்” என்ற குற்றச்சாட்டை பற்றி கேட்கப்பட்டபோதும் பதில் அளிக்காமல் விட்டு சென்றார்.
இதனிடையே,வழக்கமாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள குலதெய்வ கோவில் மற்றும் சபரிமலைக்கு செல்லும் ஓ.பன்னீர்செல்வம், இம்முறை தனது இளைய மகன் ஜெயபிரதீப்புடன் சேர்ந்து ஆலப்புழா கோவிலுக்கு செல்வது சிறப்பு அம்சமாக அமைந்துள்ளது.
English Summary
OPS sudden trip to Alappuzha What secret behind visiting temple son