தீர்ப்பு வெளியான சூட்டோடு... சுயேட்சையாக களமிறங்கும் சுயம்பு ஓபிஎஸ்.. வேட்பு மனு தாக்கல்.!!
Ops submitted nomination in Ramanathapuram constituency
அதிமுகவின் கொடி சின்னம் மற்றும் லெட்டர் பேட் உபயோகிக்க தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கியது.
அந்த தீர்ப்பில் அதிமுகவின் கொடி சின்ன மாற்றம் லெட்டர் பேட் உபயோகிக்க தனி நீதிபதி விதித்த தடையை நீக்க முடியாது என கூறி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற இரு நபர் அமர்வு தள்ளுபடி செய்தது.

இந்தத் தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஓபிஎஸ் அணிக்கு பாஜக ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கிய நிலையில் அந்த தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வேட்பாளராக சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
English Summary
Ops submitted nomination in Ramanathapuram constituency