#BigBreaking || கட்சியை கைப்பற்ற கடைசி ஆயுத்தைதை கையில் எடுத்த ஓபிஎஸ்.! சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல்.!
ops side EC admk eps issue
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது சட்டவிரோதம் என்றும், இந்த பொதுக்குழு கூட்டம் சட்டவிரோதமாக நடைபெற்றது என்றும் ஓபிஎஸ் என் தரப்பு போர்க்கொடி தூக்கி உள்ளதாகவும், இதுகுறித்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் பன்னீர்செல்வத்தின் தரப்பு தேர்தல் ஆணையத்தை இது சம்பந்தமாக நாட உள்ளதாகவும் பரபரப்பு தகவல் சற்று முன்பு வெளியாகி உள்ளது.

வெளியான அந்த தகவலின் அடிப்படையில், அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், தேர்தல் ஆணையத்தை ஓபிஎஸ் நேரடியாக நாட உள்ளதாகவும், சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கான தேதி ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், தற்போது இந்த கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படாமல் நிராகரிக்கப்பட்டது சட்டவிரோதம் என்றும் தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் தரப்பில் முறையிட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
English Summary
ops side EC admk eps issue